Saturday, 3 August 2013

ஹைக்கூ கவிதை

மரம்!


வரம் வாங்கிக்கொண்டா வந்தாய்?
மாண்டாலும் நான்தான் மற்றவர்களை
சுமப்பேன் என்று...


மரம் வெட்டி


கையில் குடம்
கண்ணில் நீர்
மரம் வெட்டிக்கும்!




அதிசயம்


காதலின் சின்னம் தாஜ்மஹால்..
உலக அதிசயங்களில் முதலிடம்...
ஆனால்... காதலை மட்டும்.....
யாரும் ஒப்புக்கொள்வதில்லை!


மச்சம்..


அழகே...
உன் உதட்டின் மேல்
அழகான புதுக்கவிதை
'மச்சம்...!'



பேருந்து


மகளிர் பேருந்தில்
அவனும் வருகிறான் என்னுடன்
'என் இதயத்தில்'



கண் அடித்ததால்...


காற்றடித்ததில் மணல்
சரிந்தது....
நீ கண் அடித்ததில்
என் இதயம்
சரிந்தது....

முதுமை?


மின்சாரத்துக்கும்
வயதாகிவிட்டதோ...
ஓல்(ட்)டேஜ் பிராப்ளம்!


நாகரீக கொள்ளை


படிக்காதவன்
பெரும் பணக்காரன் ஆனான்
பள்ளிக்கூடம் நடத்தி.....


விலைவாசி


விண்ணை தொட்டது,
அன்று சந்திராயன்,
இன்று விலைவாசி...!

தங்கம்


தாயின் தாலியை விற்று படித்தவன்
பட்டமளிப்பு விழாவில் கிடைத்தது
ஒருகிராம் தங்கம்...

கானல் நீர்


அவள் சிரித்தால்,
தரையில் சிதறியது பனித்துளிகள்,
கானல் நீர்......

ஓவியம்


சூரியன் வரைந்த
அழகான ஓவியம்
உன் நிழல்!

உயிர்கொல்லி...!


பிறப்பையே வெறுக்கவைக்கும்
ஒரே உயிர்கொல்லி நோய்
"பாசம்"!

முதிர்கன்னி


டிசம்பர் பூக்கள்
ஜனவரியிலும்
மொட்டுக்களாய்...
முதிர்கன்னி!

வால் பேப்பர்


அடுக்கு மாடிக் குடியிருப்பு
அறையெங்கும் பசுமை
வால் பேப்பரில் செடிகள்!









பாமரன்



சமுதாய
பந்தியில் படைக்கப்பட்டபின்
ஒதுக்கப்படும்
கருவேப்பில்லை!!

வாக்கிங்




நாயுடன் வாக்கிங்
இளைத்தது தினமும்
நாய்

மாது


பசியின் நிர்வாணத்தை மறைக்க
அவள் உடலை நிர்வாணம் ஆக்கினால்
விலை மாது...........

2-இன்-1


என்னை வைத்து தான் அவர்களை அடித்தார்கள்...
பிறகு என்னை வைத்தே மயக்கமும் தெளிவித்தார்கள்
நான் என்ன டூ-இன்-ஒன்னா?
-  சோடா பாட்டில்

எக்ஸாம் ஃபீவர்!



இரக்கமற்ற
கேள்விகளுக்காக
உறக்கம் அற்ற
இரவுகள்!

தலைவர்கள்

தலைவர்கள்


ஆட்சியில் ஆள்பவர்களை விட
மனதை ஆண்டவர்கள்
மரித்த பின்னும் வாழ்கின்றனர்

நாட்காட்டி

நாட்காட்டி


காலம் முழுவதும்
தூக்கு தண்டனை
காலண்டர்..!!

கல்லூரி கவிதை...


இருமனம் இணைத்து...
அரியர்கள் குவித்தது...

அரசியல்வாதிகள்


உதடுகள்
காந்தி வழியை போதிக்க
உள்ளம் மட்டும்
கோட்சேவாக

மதக்கலவரம்


கருவறையில் பத்திரமாய் கடவுள்கள்..
தெருவெங்கும் கல்லறையாய் அப்பாவிகள்!!

மரணத்திற்கு வாய்தா


கௌரவம்
வாழ வைக்கிறது
பாதி சிகரெட்

கருச்சிதைவு ..!



ஒரு வளர்பிறை
பௌர்ணமி ஆகாமல்....
'அமாவாசை' ஆனது!!

முதியோர் இல்லம்!



விழுதுகள் விரட்டி அடித்ததால் ...
ஆல மரங்கள் அடைக்கலம் புகுந்தன!!

நவீன பேய்!




நவீன மனுஷனுக்கு
பேய் பிடிச்சிருக்கு
கைபேசி உருவில்

அதோ வெகு தூரத்தில் எனது பூமி

அதோ வெகு தூரத்தில் எனது பூமி 



யாழின் நரம்புகள்
ஆலின் விழுதுகள்
வாழ்வில் ரசனைகள்
அழகிய இறகுகள்
அதனால் காலடியில்
அழகிய வானம்
அண்ணாந்து பார்க்கிறேன்
அதோ தூரத்தில் பூமி

காதலிக்க கற்றுக்கொள்

காதலிக்க கற்றுக்கொள் 



இன்பத்தை மணக்க
நீ நினைத்தால்


துன்பத்தை காதலிக்க
கற்றுக்கொள்!

எதிர்மறை தகவல்!

கண்ணகி தாசன்
கால் வயிறு கஞ்சிகூட கிடைக்காத...
ஏழைக்கு...
கம்ப்யூட்டர் இருக்கும் எதிர்காலத்தில்!!!!

பகல்

பகல்

 

 

சூரியக்
கண்ணாடியில்
பூமியின் தோற்றம்!

காதலிகளே...!

காதலிகளே...!  


 

சுனாமியவது ஒருமுறை தான்
வந்தது...
உங்களின் பார்வையினால்
ஆண்களுக்கோ பல முறை வருகுது...!
தீப்பாறையும் உங்கள் சுனாமி
பார்வையினால் அணையுது..!
வேண்டாம் இந்த பார்வை
பார்க்கும் பாவைகளே...!
உங்களால் நாங்களெல்லாம்
ஆனோம் ஊமைகளே...!

உதவி



குப்பைத்தொட்டிகளை சுத்தமாக
வைத்திருக்க உதவுங்கள்
நம்மில் சிலருக்கு அவை
உணவுக்கூடமாகவும் இருக்கிறது?

பனி மூட்டம்

பனி மூட்டம்  

 

 

 

எது எப்படியோ....
விரியாத குடையில்
விழித்துக் கொண்டிருக்கிறது....
இன்னொரு
பெரு மழைக்கான
பனி மூட்டம்...

விழிநீர் சேகரிப்புத் திட்டம்!

விழிநீர் சேகரிப்புத் திட்டம்!


சோகங்கள் தரும் 
அழுகைத் துளிகளை 
சேமித்து வை.....
சந்தோசம் 
தரப் போகும் 
"ஆனந்த கண்­ணீருக்காக"!!

தங்கப் பல் சிரிப்பென்னவோ...?

தங்கப் பல் சிரிப்பென்னவோ...? 

 

 

 

மலை அரசன்
மாட்டினான் தங்கப் பல்.....

அது


அதிகாலையில்

அழகான சூரியக் கதிர்.....!!!

டாஸ்மார்க்

மது
நாட்டுக்கு வருவாய்,
வீட்டுக்கு செலவாய்,
டாஸ்மார்க்

புற்று நோய்




தவணை முறையில்,
புற்று நோய் வாங்கினேன்,
கடன் தொல்லை...

உண்மை


பாதங்களை பாதுகாத்தாலும்
பாதுகாப்பில்லாத இடம்தான்
எப்போதும் செருப்புகளுக்கு!

வானம் என்ற தினசரிப் பத்திரிக்கை

வானம் என்ற தினசரிப் பத்திரிக்கை 

தங்கம் விலை ஏறியது

விடியலில் வானம்


செய்தி வாசித்தது


தக தக சூரிய உதயம்

தீபாவளி ரகம்


பருத்திக்கு அம்மா
பழசுக்கு ஆயா
பட்டுக்கு மனைவி
துட்டுக்குப் புருஷன்

நீர்

நீர்

 

 

'நீர்' 
அடித்ததும்
விலகியது
 'நீர்'
உற்சாக பானமும்
மரியாதையும்!

எல்லாமே விளையாட்டு இயற்கையில்





மீன்கள் ஸ்கிப்பிங் விளையாட கயிறுகள்

நெடிதுயர்ந்த பூங் கொடிகளில் நிழல்கள்


ஏரிக்குள்

பசி


சமூகப்பணியில் மாடுகள்
நகரத்துச் சுவர்களில்
ஆபாச சுவரொட்டிகள்

வண்ண ஓவியம் வரைய சின்ன தூரிகை

வண்ண ஓவியம் வரைய சின்ன தூரிகை 

வானம் வரைய என்
விரல் இடுக்கில் தூரிகை
தூரத்து தென்னை மரம்

தீ


தந்தியை விட
வேகமாகச் சென்றடைகிறது
வதந்தி!

தெருவிளக்கு


விடிந்து விட்டது
இனி நிம்மதியாய்
உறங்கலாம்!
'தெருவிளக்கு'

மீன் தொட்டி


உன் மீன் தொட்டிக்குள்
என் மனது - பராமரிப்பது
நீ என்பதால் மட்டும்!

தற்கொலை


வீரமான கோழைத்தனம்
புரியவில்லையா?
கோழையால் மட்டுமே
சாத்தியப்படும் வீரசெயல்....

காட்டிலே இசைக்கலை....

காட்டிலே இசைக்கலை.... 

காட்டிலே இசைக்கலை....

மூங்கில் காட்டில் மழை.....

காற்று கை தட்ட துளை.

தூள் கிளப்பும் கிராபிக்ஸ்


தூள் கிளப்பும் கிராபிக்ஸ் 

கிராபிக்சில் எனது
சிக்னேச்சர்

துள்ளி ஓடும்

புள்ளி மான்கள்......

எல்லாம் காதல் மயம்


எல்லாம் காதல் மயம்  

எல்லாம் காதல் மயம் - ஹைக்கூ கவிதை

 

பனித்துளியே
வாட்டர் தீம் பார்க்

நிழல் தர
நிற்கும் காளான்

எறும்புகளே
காதலர்கள்

எங்கெங்கும் காதல்.....

இன்பமே ரசனை

இயற்கை எழுதிய திருக்குறள்

இயற்கை எழுதிய  திருக்குறள்  

 

 

 

 

காடும் எழுதப் பழகியது
கருத்து மிகு குறள்.....

மாட்டு வண்டி செல்ல

ரெட்டைத் தடங்கள்.....

காலணி


நான் காலணி அணியவில்லை என்று
சலித்து கொண்டு இருந்தேன்,
கால் ஊனமுற்ற ஒருவரை
பார்க்காதவரை.....

திருநங்கை


உதாரணம்:
பிரம்மனுக்கும் மறதி
உண்டு
என்பதற்கு.

வேறுபாடு


பெண் ஆடை விலகினால்?
ஆர்வத்துடன் பார்ப்பது காமம்
அழகாய் ரசிப்பது காதல்
பொன்னாடையால் மூடுவது நட்பு!

மீசை


இந்த மீசை.,
என்ன இறக்கைகளா..
முளைத்த உடன்.,
மனதை பறக்க செய்ததே...!!!

Friday, 2 August 2013

தமிழ் தாய் வாழ்த்து



 தமிழ் தாய் வாழ்த்து

 

100 கோடியில் சிலை வைப்பதை விட !

ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் ... மற்ற பள்ளிகளில் "நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம் கலாச்சாரம் பண்பாடு போற்றும் ஆங்கில பாடல்கள் தான்" !

தமிழக அரசால் போற்றப்படும் இந்த தமிழ் தாய் வாழ்த்தும் இதை எழுதியவர் தெய்வத்திரு.மனோன்மணியம் சுந்தரனார் என்பது அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும்.... இந்த பதிவில் எனக்கு தெரிந்த (படித்த) இந்த அறிய பாடல் பற்றி வேறு சில விவரங்களும் , இந்த பாடலின் பொருளையும் தங்களுடன் பகிரலாம் என்பது என் எண்ணம் -- தெரிந்தவர்கள் பொருளிலோ தந்துள்ள விவரத்திலோ ஏதாவது விடு பட்டிருந்தால் / தவறாக கூற பட்டிருந்தால் தயவு கூர்ந்து தெரிவிக்கவும் .

தெய்வத்திரு . சுந்தரனார் அவர்கள் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க்கு தொண்டாற்றிய பெரும் மேதைகளில் முக்கியமானவர். இவர் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். மனோன்மணியம் என்னும் நாடக நூல் - இவர் எழுதிய மிகப்பெரிய படைப்பாகும்.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் சில திருத்தங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன்1970 இல் அறிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் தெரிந்த அந்த பாடல் இதோ ...அதன் பொருளும் தந்துள்ளேன் ...

பாடல் :
~~~~~~

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

அறிஞர்களின் பொருள் :
~~~~~~~~~~~~~~~~~~~

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான. பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!

இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

எளியவார்த்தையில் :
~~~~~~~~~~~~~~~~~~
அதாவது -- இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பரந்த இந்த கடல் தான் ஆடை ...பாரத நாடே அவளின் முகம் ...தென்திசை அதன் நெற்றியாம்.... அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் ...அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

இன்னொரு செய்தி ....

தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக கொண்ட மற்றொரு மாநிலமான புதுச்சேரியில் - புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர், தமிழ் உலகுக்கு பெரும் தொண்டாற்றிய தெய்வத்திரு. பாரதிதாசன்...இதோ அந்த பாடல் .. பாடலே எளிய முறையில் இருப்பதால் பொருள் தனியாக தேவையில்லை ... இந்த பாடல் தான் புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் பாட படுகிறது ( நான் என்னுடைய +1, +2 புதுவை மாநிலம்- காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல் நிலை பள்ளியில் படித்தேன் ..இந்த பாடல் தான் காலை வணக்க கூட்டத்தில் பாட படும் )


வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

கடைசியாக ...

இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள் படைப்புகள் நம் மொழியில் ஒன்றன கலந்துள்ளன - அவைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றாலே அது இந்த தமிழ் அன்னைக்கு பெரும் தொண்டாகும் ..... 

100 கோடியில் சிலை வைப்பதை விட !

சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்







# சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம் #


கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் .... இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..பல வற்றை அறிய விஞானம் -ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ... அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. 
 CERN, have installed a NATARAJAR statue in their premises- for more details can check 
fritjofcapra.net/shiva.html )

அம்மா அழைத்தால் மட்டும் நமக்கு அப்படி ஒரு அலட்சியம்!!!!



அம்மா அழைத்தால் மட்டும் நமக்கு அப்படி ஒரு அலட்சியம்!!!!

வீட்டுக் குக்கரின் விசில் சத்தத்திற்கு
விரைந்துச் செவிச் சாய்ப்பாள்...

வீதியில் செல்லும் வழிப்போக்கன்
வாய்மொழிக்கும் பட்டனெச் செவிச் சாய்ப்பாள் ..

தொலைவில் அழைக்கும் தொலைப்பேசியைத்
தேடித் தொடர்ந்துச் செவிச் சாய்ப்பாள்..

படபடவெனச் சரிந்து விழும் பாத்திர ஒலிக்கும்
பக்குவமாய் செவிச் சாய்ப்பாள்..

நிறைந்து வழியும் தண்ணீர் தாளத்திற்கும்
தவிப்போடு செவிச் சாய்ப்பாள்..

வண்டிச் சாவியைத் தேடும் மகனின் குரலுக்கும்
வடிவாய் செவிச் சாய்ப்பாள்..

தேநீர் தேடும் கணவனின் கட்டளைக்கும்
தெவிட்டாமல் செவிச் சாய்ப்பாள்..

புத்தகம் எங்கே எனும் மகளின் புலம்பலுக்கும்
புன்னகையுடன் செவிச் சாய்ப்பாள்..

நித்தம் நித்தம் எல்லோர் அழைப்பிற்கும் செவிச் சாய்த்து
நிறைவாய் சேவைச் செய்வாள்..

இவளின் அழைப்பிற்கு மட்டும் , " இதோ வருகிறேன் " என எப்போதும் பதில் கிடைப்பதில்லை ..

"இரும்மா வருகிறேன் " என்று மட்டுமே கிடைக்கும்...

இன்றைய நிலை...,




 
அன்று
ஞானத்தை
தேடி
புத்தர்
சென்றார்
போதி
மரத்திற்கு
இன்று
போதி
மரம்
காத்திருக்கின்றது
புத்தர்களைத்
தேடி...!!!

இன்றைய நிலை...

இன்றைய நிலை...


பெரிய வீடு
ஆனா பெற்றவர்களுக்கு இடமில்லை...

... விலை அதிகமான வாட்ச்
அதை பார்க்க நேரமில்லை...

நிலவை தொட்டாச்சு
ஆனா பக்கத்து வீட்ல யார் இருக்கான்னு தெரியாது...

மெத்த படிப்பு
பகுத்தறிவு இல்லை...

மருத்துவத்தில் முன்னேற்றம்
ஆரோக்கியத்தில் குறைபாடு...

அதிக வருமானம்
நிம்மதி இல்லை...

அதிகம் சாராயம்
குடிநீர் பற்றாக்குறை...

அதிக முகநூல் நட்பு
உயிர் நட்பு இல்லை...

அதிகம் மனிதர்கள்
மனித நேயம் குறைந்து விட்டது...

இந்நிலை மாறுமோ...???
• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

• சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ்.

• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

• கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி.

• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள"திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.

• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர்ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

• தாஜ்மஹால் இருக்கும்ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.

• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

நன்றி..

பல தளங்களில் இருந்து திரட்டியது..

கருவுற்றால், &, கருணையுற்றால்




 ஒரு குழந்தைக்கு மட்டும் 
தான் 'அன்னையாக' முடியும்..... 
ஆனால்..... 
ஆயிரம் 'குழந்தைகளுக்கு கூட
 "அன்னையாக" முடியும்"....

Photos

பெற்ற தாயை பிணம் என்றா அழைப்பாய்? இது நம் தாய்க்கு மானக்கேடு அல்லவா?

பெற்ற தாயை பிணம் என்றா அழைப்பாய்? இது நம் தாய்க்கு மானக்கேடு அல்லவா?


அருமை தமிழ் உறவுகளே நம்மில் பல பேர் பெற்ற தாயை மம்மி என்று ஆங்கிலத்தில் மிக பெருமையோடு அழைப்பதை கண்டிருப்போம். அம்மா என்று அழகாக அழைக்கும் குழந்தைகளையும் மம்மி என்று அழைக்க வற்புறுத்துகிறோம்.

ஆனால் உண்மையிலேயே மம்மி என்றால் பதபடுத்தப்பட்ட பிணம் என்று பொருள். பெற்ற தாயை பிணம் என்றா அழைப்பாய்? இது நம் தாய்க்கு மானக்கேடு அல்லவா?

அம்மா என்று அழை அவளை
அடுத்து வருகின்ற பிறவிகெல்லாம்
ஆண்டவன் அம்சமாய் காத்திடுவான் உன்னை...


விலங்குகள் கூட விபரம் தெரிந்ததால்தான்

விளக்குகிறது தமிழின் புகழை அம்மாவென்று..

தமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் குப்பையில்..?!

தமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் குப்பையில்..?!


தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது .

இங்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கையெழுத்து படிகள், பழமையான நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1627 அச்சிடப்பட்ட பழமையான் அச்சு புத்தகம் இங்கு பாதுகாக்கப் பட்டு வருகிறது .

தமிழர் நாட்டில் உள்ள பண்டைய ஓலை சுவடிகளில் 50 மட்டுமே இது வரை படித்து அறியப்பட்டுள்ளன. அதற்குள் அடங்கியவை தான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூற, புறநானூறு, பதிற்று பத்து, எட்டு தொகை, நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு சீவக சிந்தாமணி, பரி பாடல் போன்றவை.

இதில் சில இலக்கியங்களின் செழுமையும் தொன்மையையும் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.

மூன்று லட்சம் ஓலை சுவடிகளையும் படித்தறிந்தால் தமிழனின் வாழ்க்கை முறையும் தமிழ் மொழியின் செழுமையும் பற்றி நாம் அறிந்து கொள்ள எதுவாக இருக்கும்.

உலகில் தோன்றிய மொழிகளில், மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழினம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க இந்த ஓலை சுவடிகள் உதவும்.

செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையான இலக்கியங்களை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு

இதற்கு வெறும் நூறு கோடி ரூபாய் ஒதுக்கினால் போதுமானது.

இராவணன் இயற்றிய நூல்கள்

இராவணன் இயற்றிய நூல்கள்




இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம்

1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்

* * * * * * * * * * * * * * * * * * * * *
"இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே"
-திருநீற்றுப்பதிகம்-

இராவணன் மேலது நீறு – இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு

எண்ணத் தகுவது நீறு - தியானிக்க ஏற்றது திருநீறு

பராவணம் ஆவது நீறு – பாராயணம் செய்யப்படுவது திருநீறு

பாவம் அறுப்பது நீறு – பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு

தராவணம் ஆவது நீறு – தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு

தத்துவம் ஆவது நீறு – எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது திருநீறு.

அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே – அரவுகள் (பாம்புகள்) வணங்கும் (நிறைந்திருக்கும்) திருமேனியை உடைய திருவாலவாயான் திருநீறே.

கிளி




கிளிஜோசியத்தில்
நம்பிக்கை இல்லை..
ஆனாலும் பார்க்கிறேன்
கிளியின் ஒருநிமிட
சுதந்திரத்திற்காக..

photos







மரத்தின் கிளையில் அமரும் பறவைக்கு கிளை முறிந்து விடுமோ என்ற பயம் இருப்பதில்லை.

காரணம் , அது நம்பிக்கை வைத்தது கிளையின் மேல் அல்ல தன் இறக்கைகளின் மேல்..

நீங்களும் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டியது உங்கள் மேல் தான்..

தந்தை


 
 
 
தன்னை விட ஒரு படி மேல தான்

தன் மகன் இருக்க வேண்டும்

என்பது தான் எல்லா தந்தைக்கும்

உள்ள ஒரே சிந்தனை.

  -புதிய பாரதீ

தந்தை


தாயின் கருவில் பத்து மாதம்
என் தந்தை தோளில் இன்று வரை

photos



 

இவற்றை எல்லாம் 
போட்டோவில் தான் காணவேண்டுமோ 
நம் அடுத்து தலைமுறை...!!

photos



நாம் ஆதரிக்க வேண்டிய பானம் இவை தான்...

பெப்சி, கோக் போன்ற பூச்சி மருந்துகளை அல்ல...!

இறந்தும் வாழ்வது

இறந்தும் வாழ்வது 

 

தாய் வயிற்றில் கருவாகி தரணியில் வந்துதித்தால் மண்ணடியில் எருவாகி மாளவேண்டும் - இது நியதி
ஆனால்-
துன்பத்தில் இருப்போர்க்கு துணிந்து நாம் உதவி செய்தால்
மற்றோர்க்கு தீங்கின்றி நாமிங்கு வாழ்ந்திருந்தால்
நல்லன நினைத்து நன்மைகள் செய்திருந்தால்
ஊன் மறைந்தாலும் நாம் வாழ்வோம்

- க.டோதரன் (வகுப்பு 8 ) (மாணிக்கவாசகர் சிறுவர் இல்லம்)

 

அம்மா

ஆசபட்ட‬ எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் பாடல் வரிகளில் இருந்து

 


 



பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா,
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி மறப்பா,
இளவட்டம் ஆன பின்னும் எண்ணை தேச்சு குளிக்க வைப்பா,
உச்சி முதல் பாதம் வரை உச்சு கொட்டி மகிழ்ந்திடுவா...
அம்மா


வறுமை பட்டவருக்கு மேலும் மேலும்
வறுமையை கொடுப்பவன் இறைவனா..?
அப்படி என்றால்,,,
உணர்வற்ற சிலைகளுக்கு எதற்கு
ஆடம்பரமான கோவில்களும் பூசைகளும்...???

தேடி திரிந்து கோவில் உண்டியலில் போடுவதை
ஒரு மனித நேயத்துடன் ஏழைகளுக்கு
ஒரு நேரமாவது உணவாகவும், கல்வியாகவும்
கொடுத்து பாருங்கள்...!!!

அந்த மனிதனே,,,
இந்த உலகில் நாம் காணும் "இறைவன்"

''அம்மா''

''அம்மா''

 
 
உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தால் தானோ
என்னவோ
எனக்கு வலி ஏற்படும் போதெல்லாம்
உன்னையே அழைக்கிறேன்
''அம்மா''
 

மழை

 மழை 


நீல வானம் இருண்டது.
நெடிய மேகம் திரண்டது.
மேளம் போல இடித்தது.
மின்னல் வானில் வெடித்தது.

சீறிக் காற்றும் எழுந்தது.
சேர்ந்து மழையும் பொழிந்தது.
பாறி மரமும் வீழ்ந்தது.
பாய்ந்து வெள்ளம் வழிந்தது.

ஆறாய் நீரும் பாய்ந்தது.
அருவியாகப் பரந்தது.
சேறாய் வயலும் நிறைந்தது.
செந்நெல் பூத்துச் சிரித்தது.

வரண்ட மண்ணும் நனைந்தது.
செடியும், கொடியும் தழைத்தது.
இருண்ட வாழ்வு அகன்றது.
எல்லோர் மனமும் குளிர்ந்தது.

சமாதானம்

சமாதானம் 


சமாதானம் வருமென்று
காத்திருந்த காலம் அன்று
போர்முனையில் நான் நின்று
பொறி கலங்கும் நேரமின்று


வெள்ளைப் புறா ஒன்று
விண்ணேறிப் பறக்கையிலே
தொல்லை இல்லை இனி
தோன்றியது சமாதானம்
என்று மனம் குளிர


எங்கிருந்தோ அம்பு ஒன்று
விரைந்த புறா மேலே
விருக்கென்று பாய்ந்ததிங்கே.


இரக்கமற்ற வேடன் அங்கே
தன்னலம் தான் கருதி
ஏய்துவிட்டான் அம்பு தனை.


குஞ்சுப் புறா அது
குருதி வெள்ளத்தில்
பஞ்சுப்பதுமை போல
மிதப்பதன் கொடுமை என்ன?


சமாதானப் புறா அங்கே
சாவதனைத் தேடியது.
தவிக்கின்ற மனித குலம்
சமாதானம் தேடுதிங்கே.


தேடியலைந்தாலும்
கிடைக்கவில்லை சமாதானம்.
கானலாய் தோன்றி அது
மறைந்ததெங்கே நாம் காணோம்.


வீட்டில் இல்லை சமாதானம்.
வெளியில் இல்லை சமாதானம்.
நாட்டினிலுமில்லை சமாதானமென்றால்
இனி எங்கு நாம் போவோம்.